For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சசிகலாவின் புதிய இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!

10:02 PM Feb 24, 2024 IST | Web Editor
சசிகலாவின் புதிய இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த்
Advertisement

சென்னை போயஸ்கார்டனில் புதிதாக கட்டப்பட்டுள்ள சசிகலாவின் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த்  சென்றார்.

Advertisement

சென்னை போயஸ்கார்டனில் "ஜெயலலிதா இல்லம்” என்ற பெயரில் சசிகலா புதிய வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடந்தது. இதற்கு நெருங்கிய வட்டராங்கள் மட்டுமே சென்றனர். இந்த நிலையில், சசிகலாவின் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்றார். சசிகலா உடன் ஒன்றரை மணி நேர சந்திப்பிற்கு பிறகு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“இன்றைய சந்திப்பின் முக்கியத்துவம் கிரகப்பிரவேசம். வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிகலாவிற்கு பெயர், புகழ், நிம்மதி, செல்வம், சந்தோஷம் எல்லாம் கொடுக்கனும்னு  ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என தெரிவித்தார். மேலும், இன்று முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அவரின் அந்த ஆளுமை இடத்தை தமிழுநாட்டில் பூர்த்தி செய்யக்கூடியவராக யார் இருப்பார் என்ற கேள்விக்கு, அரசியல் பற்றி பேச விரும்பமில்லை என தெரிவித்தார். மேலும் அடுத்த படத்திற்கான வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Tags :
Advertisement