Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'ஏன்னா நீ என் நண்பன்...' - இந்தியன் 2 இன்ட்ரோவை நாளை வெளியிடுகிறார் ரஜினிகாந்த்!

03:37 PM Nov 02, 2023 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

இந்தியன் 2 இன்ட்ரோ க்ளிம்ப்ஸ்  வீடியோவை நாளை மாலை 5.30க்கு  நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன்,  வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது.  கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாகவும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடனும் படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,  படக்குழு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது.  அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த வீடியோவை இந்திய சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரமும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement