For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ரஜினிகாந்த் சங்கி இல்லை!” - ‘லால் சலாம்’ இசைவெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு!

11:05 PM Jan 26, 2024 IST | Web Editor
“ரஜினிகாந்த் சங்கி இல்லை ”   ‘லால் சலாம்’ இசைவெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு
Advertisement

ரஜினிகாந்த் சங்கி இல்லை என லால்சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அத்திரைப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்

இந்நிலையில் சென்னையில் இன்று ( 26.01.2024) நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மூத்த திரைப்பட இயக்குனர் ரவிக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:

இந்த இடத்தில் நான் நிறையா பேச ஆசை படுகிறேன். 3 படத்தில் asst. Dir ஆக இருந்தார் விஷ்ணு. இந்த கதையை 2,3 பேருக்கு சொல்லிருக்கிறேன். தொலைப்பேசியில் அழைத்தால் எடுத்து பேசுகின்றனர். அப்பா பத்தி கேட்கிறாங்க; ஆனால் படத்துக்கு நடிக்க மாட்டேன் என்று கூறினார்கள். பலரும் மதம் சமாந்தமாக இருக்கு என்று நிராகரிதார்கள். இந்த படம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்னார். அப்பா கிட்ட கதைய காண்பித்தேன். அப்பாவே பண்றேன் என்று சொன்னார். 35 வருடங்களாக அப்பா சம்பாதித்த பெயரை உடைக்க கூடாது என்று நினைத்தேன். அதனால அப்பாவ எப்போதும் நடிக்க சொல்ல மாட்டேன். ஆனால் அப்பா இந்த கதை பிடித்து அவராக நானே நடிக்கிறேன் என்று கூறினார்.

VIP-க்கு எல்லாம் எளிதில் கிடைக்கும் என்று நினைக்கிறவர்கள். அப்படி நினைப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள். புது முகங்களுக்கு கூட எளிதில் அனைத்தும் கிடைத்து விடும். ஆனால் எங்கள மாதிரி ஆள்ங்களுக்கு கிடைக்கிறது தான் கடினம். படத்தோட ஷூட்டிங்கில் செஞ்சி, திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது. எல்லாருமே தன் வீட்டு குழந்தையை போல் பார்த்து கொள்கிறார்கள்.அதனால் தான் எல்லா இயக்குனர்களும் வெளியிடங்களில் ரஜினியை வைத்து எளிதில் படம் எடுக்கிறார்கள். ரஹ்மான் குழந்தை மாதிரி. எல்லா புது தொழில்நுட்பதையும் தெரிந்து வைத்திருப்பார். இரவில் தான் இசை அமைப்பார்.

என் குழந்தைகள் தான் எனக்கு கிடைத்த வரம். பெரியவன் ரொம்ப தத்துவம் பேசுவான் சின்னவர் ரொம்ப critic. பொண்ணு ஒரு கஷ்டம் என்றால் பணம் கொடுக்கலாம் ஆனால் அவர் எனக்கு படம் கொடுத்து உதவி இருக்கிறார். இந்த படத்த அவர் எனக்காக ஒத்துகொள்ளவில்லை. இந்த படம் சொல்ல வரும் கருத்துக்காக தான் ஒத்துகொண்டார்.

சங்கி வார்த்தை முதலில் எனக்கு தெரியாது. அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. ஒரு இயக்குனராக இதை சொல்ல பெருமை படுகிறேன். ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் லால் சலாம் படத்தில் நடிக்கனும். சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கி இந்த படம் பண்ண முடியாது. அந்த தைரியம் ரஜினியை தவிர யாருக்கும் இல்லை. இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே பண்ணிருக்க மாட்டாங்க அவர தவிர. நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமை படுத்தும். ரஜினிகாந்த் சங்கி இல்லை. Love humanity. இவ்வாறு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினார்.

Tags :
Advertisement