For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்த படம் குறித்து அப்டேட் கூறிய ரஜினிகாந்த்...!

12:50 PM Mar 09, 2024 IST | Web Editor
அடுத்த படம் குறித்து அப்டேட் கூறிய ரஜினிகாந்த்
Advertisement

வேட்டையன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனது அடுத்த படம் குறித்து ரஜினிகாந்த் அப்டேட் தந்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.  இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை ஜெய்பீம் படம் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்ற த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.  இது ரஜினியின் 170வது படமாக உருவாகி வருகிறது.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன்,  ஃபஹத் ஃபாசில்,  மஞ்சு வாரியர்,  ராணா,  ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.  அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். வேட்டையன் படத்தின் ஷூட்டிங்  மும்பை, கேரளா, திருநெல்வேலி என நடைபெற்று இறுதியாக ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் நடைபெற்றது.  இதுவரை 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் மீதமுள்ள காட்சிகளை விரைந்து முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

கடந்தாண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலாவது வழக்கம்.  இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  தொடர்ச்சியாக படங்களில் ரஜினி நடித்து வரும் நிலையில் வேட்டையன் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த படமும் ஜெய்பீம் படம் போல நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான வேட்டையன் பட படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் ஹைதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது பேசிய அவர்,  “வேட்டையன் படம் இதுவரை 75% படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.  இதுவரையில் எந்த படமும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என தெரிவித்து வழக்கம் போல் விரைந்து சென்றார்.

Tags :
Advertisement