For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த் | படக்குழுவினர் நெகிழ்ச்சி!

03:02 PM Nov 18, 2023 IST | Web Editor
படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்   படக்குழுவினர் நெகிழ்ச்சி
Advertisement

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரணாவத் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

ஏ.எல்.விஜய் - நடிகை கங்கனா ரனாவத் இணையும் புது படத்தின் பூஜை இன்று தொடங்கிய நிலையில், பட செட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

தனு வெட்ஸ் மனு எனும் வெற்றிப் படத்தில் இணைந்து நடித்த நடிகர் மாதவன் நடிகை கங்கனா ரனாவத் ஜோடி மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளனர். தலைவி படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் மீண்டும் இணைந்துள்ள நிலையில்,  இந்தப் படம் பற்றி இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில்,  தமிழ் - இந்தி என பை லிங்குவல் திரைப்படமாக இப்படம் வெளியாக உள்ளது.  சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக் களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிலையில்,  படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நடிகை கங்கனா, 'எங்களின் முதல் நாள் படப்பிடிப்பில் இந்திய சினிமாவின் கடவுள் தலைவர் ரஜினிகாந்த் எங்கள் செட்டிற்கு திடீர் வருகை தந்து அதிர்ச்சியளித்தார். என்ன ஒரு அழகான நாள்' என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement