For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Thalapathy69 இல் இணையும் ரஜினி பட நடிகை? வெளியான தகவல்!

07:01 PM Sep 29, 2024 IST | Web Editor
 thalapathy69 இல் இணையும் ரஜினி பட நடிகை  வெளியான தகவல்
Advertisement

தளபதி 69 திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வெங்கட் பிரபு  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் கடந்த செப்.5 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்குமேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விஜய் தனது 69 வது படத்தில் நடிக்கிறார். இதற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை, அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் 'தளபதி 69' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை மஞ்சு வாரியர் தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement