Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’?

09:29 AM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து  நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதையும் படியுங்கள்: செங்கல்பட்டில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்..!

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 172-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி, ரஜினி 172 படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது படங்களில் சமூகம் சார்ந்த கருத்துகளை வைத்து இயக்கும் மாரி செல்வராஜ், நடிகர் ரஜினிகாந்தின் படத்தை எவ்வாறு இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
mari selvarajmovie updatenews7 tamilNews7 Tamil UpdatesRajinikanthThalaivarThalaivar 172
Advertisement
Next Article