ஐபிஎல் | சென்னையை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் அணி!
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதின. அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்து அசத்தினார். சென்னை தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.