ராஜஸ்தான் மாநில அமைச்சரவை விரிவாக்கம் - பதவியேற்ற 22பேரில் 17பேர் முதல்முறை அமைச்சர்களாக பதவியேற்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது இவற்றில் புதிதாக அமைச்சராகும் 17பேர் உட்பட 22பேர் அமைச்சராக பதவியேற்றனர்.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.
பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சா்மா தோ்வு செய்யப்பட்டு ராஜ்ஸ்தான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதல்முறை பாஜக எம்எல்ஏவான இவா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றவா். மாநிலத்தின் துணை முதல்வா்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மாநில அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், மூத்த பாஜக தலைவர் கிரோடி லால் மீனா உள்பட 22 பாஜக எம்.எல்.ஏ.க்கள்அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்களில் 12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் ( தனி பொறுப்பு) , 5 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற 22 பேரில் 17
பேர் முதல்முறையாக அமைச்சர்கள் ஆவர்.
இவர்களில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த 2 பேரும், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 4 பேரும், ராஜபுத்திரர்கள் சமூகத்தைச் சேர்ந்த 3 பேரும், பழங்குடியின மற்றும் பட்டியிலன சமூகங்களைச் சேர்ந்த 3 பேரும் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் கிரோடி லால் மீனா (72) வயதில் மூத்த அமைச்சராகவும், அவினாஷ் கெலாட் (42) இளம் அமைச்சராகவும் உள்ளனர். தற்போது முதல்வர், துணை முதல்வர் உள்பட ராஜஸ்தான் அமைச்சரவையில் மொத்தமாக 25 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 20 பேர் முதல்முறையாக அமைச்சர்களாகப் பதவி ஏற்றிருப்பவர்கள்