குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 197 ரன்களை இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) சவாய் மான்சிங் மைதானத்தில் 24 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 4.2 ஓவரில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஷ்வால் அவுட்டானார்.
அடுத்ததாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இதனையடுத்து பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய இந்த இணை 16. 5 ஓவரில் 150 ரன்களை தொட்டது. 78 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்தமையர் முதல் பந்திலே பவுண்டரி அடித்தார். பவுண்டரிகளை விளாசிய சாம்சன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை ராஜாஸ்தான் ராயல்ஸ் எடுத்துள்ளது. இதன்மூலம் குஜராத் அணிக்கு 197 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.