மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் சத்தீஸ்கரில் " வானவில் " வாக்குச் சாவடி மையம்..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாற்றுப் பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் " வானவில் " வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ரூ. 500 மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.
நேற்று சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கன்னி வெடி தாக்குதலில் 3பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதி இன்று தொடங்கியது. சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 5,304 வாக்குச் சாவடிகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.