Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | இரவு 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

07:03 PM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் இதனால் தமிழ்நாட்டில் வரும் 26 முதல் 29ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article