#RainAlert | அடுத்த 2 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் வரும் 11ம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.