For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RainAlert | 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

06:41 AM Nov 08, 2024 IST | Web Editor
 rainalert   13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா
Advertisement

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, “ 08.11.2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிைகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.11.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிைகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர்.மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர்,மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் நிருவாளர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகடுகளிலும் உரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.11.2024: கடலோர தமிழகத்தில் ஓருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிைகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை  வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31* செல்சியஸை மட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

08.11.2024: வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை எட்டிய கடலோரப்பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 லோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல்

08.11.2024: வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோரப்பலைகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்கூறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement