#RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (ஆகஸ்ட் - 27ம் தேதி) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : #StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!
இந்நிலையில், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தேனி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.