#RainAlert | மும்பையில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!
மும்பையில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகியது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மும்பையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, "மும்பை தாணே மாவட்டத்துக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்காட்டில் நாளை முதல் திங்கள் வரை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஒரு சில இடங்களில் வரும் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது."
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.