Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை | விமான சேவை பாதிப்பு!

07:49 AM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 18 விமானங்கள் தாமதத்தால் பயணிகள் தவித்து வருகின்றனர். வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றினால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி தவித்தனர். பகலில் வெயிலினாலும் இரவில் வெப்பத்தின் தாக்குதலினாலும் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3 மணி முதல் இடிமின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், கோயம்பேடு, அண்ணாசாலை, கிண்டி,மந்தைவெளி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்தது. மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. வறுத்தெடுத்த வெயிலினால் அவதியடைந்து வந்த பொது மக்கள் மழை பெய்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழையால் மோசமான வானிலை நிலவி வருகிறது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 18 விமானங்கள் தாமதத்தால் பயணிகள் தவித்து வருகின்றனர். டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஐதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை. 17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. அவ்வப்போது இடி மின்னல் சூறைக்காற்று ஓயும்போது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கின. சென்னையில் இருந்து அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி செல்லும் விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags :
மழைதமிழ்நாடுவானிலைRaintamil naduWeather
Advertisement
Next Article