#WeatherUpdate | இரவு முதல் பெய்த மழை!...சென்னையை சில்லென மாற்றிய வானிலை!...
07:04 AM Sep 21, 2024 IST | Web Editor
Advertisement
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
Advertisement
தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இம்முறை தமிழ்நாட்டில் சற்று அதிமாக பெய்திருந்தாலும், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மிகக் கடுமையாக உயர்ந்தது.
இந்நிலையில் சென்னை நகரின் பல்வேறு நகரங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினம்பாக்கம், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, மெரினா, பெரம்பூர், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த இம்மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை நிலவியது. சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை, பல இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது.