11 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?
கடலோர ஆந்திரப்பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்.19வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி
கோயம்புத்தூர்
திருப்பூர்
தேனி
திண்டுக்கல்
லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
மதுரை
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி