Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

06:32 AM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Advertisement

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும், செப்டம்பர் 18ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Rainrain alertTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article