சென்னையில் சாரல் மழை! - குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த, நிலையில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது. ஈரோடு மாவட்டத்தில் 112 டிகிரி அளவுக்கு கோடை வெயின் தாக்கம் அதிகரித்து இருந்தது. வெப்ப அலை காரணரமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சென்னையில் மந்தமான வானிலையும், பிற மாவட்டங்களில் மழை பெய்வதால் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
இதையும் படியுங்கள் : ‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ – கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!
குறிப்பாக, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, ஆயிரம் விளக்கு, அசோக் பில்லர், ஜாபர்கான் பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அடையார், பட்டினப்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.