Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் மழை - துணை முதலமைச்சர் ஆய்வு!

11:02 AM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

“இப்போது சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்தான் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பெரிதாக ஏதும் வரவில்லை. சமூக வலைதளங்களில் செய்யப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீரை அகற்ற சக்தி வாய்ந்த மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் எந்த பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை.

கடந்த முறையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இந்த முறையும் மண்டல அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.மழைநீரைப் பொறுத்து கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். செங்கல்பட்டு 1.06 செ.மீட்டர் மழை, திருவள்ளூரில் 0.6 செ.மீட்டர் மழை, காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

முதலமைச்சர் உத்தரவின்படி கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தோம்.1499 மோட்டார் பம்புகள், 150 நீர் உறிஞ்சும் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மழைக்கான பணியை காட்டிலும் தற்போதைய மழைக்கு பணியை அதிகமாக்கி உள்ளோம். கூடுதல்  மோட்டார்கள் ஏற்பாடு செய்துள்ளோம். சென்னை மாநகராட்சி சார்பில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயாராக உள்ளது. சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதையை மட்டுமே மூடப்பட்டுள்ளது. அதுவும் ரயில்வே மேம்பால பணிக்காக மூடப்பட்டுள்ளது. கால்வாய்களில் தூர்வாரும் பணி சீக்கிரம் முடிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
deputy cmDMKUdhayanidhi stalin
Advertisement
Next Article