தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை! | எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.27) முதல் வரும் ஜன. 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் டிச.31ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான வழக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.