"27 மாவட்டங்களில் 10 மணி வரை மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்!
07:48 PM Nov 16, 2024 IST | Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சியினால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்னும் 2 மணி நேரத்திற்குள் அதாவது 10 மணிக்குள் சென்னை, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.