மழை, வெள்ளம் எதிரொலி - தூத்துக்குடியில் 5வது நாளாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பு காரணமாக தொடர்ந்து 5-வது நாளாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் வடியாததாலும், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : தென்மாவட்டங்களை உருக்குலைத்த வெள்ளம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.