Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ChennaiRain | கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் MKStalin ஆய்வு!

12:27 PM Oct 17, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

தென்மேற்கு பருவமழை முடிந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினாலும் கடந்த 7ஆம் தேதி இரவுமுதல் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் முழுவதும் கனமழை பெய்தது.

இதனிடையே வெள்ள அபாயம் ஏற்படுவதை தடுக்க முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் என பலரும் பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும், அரசின் உடனடி நடவடிக்கைகளால் மழை நீர் தேங்கிய பகுதிகளில் நீர் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி முதற்கட்டமாக வீனஸ் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ரெட்டேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினமும் யானைக்கவுனி, பேசின்பிரிட்ஜ் மேம்பாலம், புளியந்தோப்பு பகுதிகளுக்கு சென்று களப்பணிகளை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tags :
CMO TamilNadukolathurMK StalinRain Damage
Advertisement
Next Article