Rain Alert | சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை... அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 10ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : “அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ
வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளபடி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் அளவுக்கு அதிகமான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட பகுகிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், நீலகிரி, திருப்பூர், தென்காசி, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.