Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Rain Alert | மக்களே உஷார்.. அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03:02 PM Jul 05, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,
"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 5) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜூலை) : தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
07-07-2025 முதல் 11-07-2025 வரை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, இன்றும் நாளையும் (ஜூலை 5,6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன்  கூடிய லேசான / மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:   
தமிழக கடலோரப்பகுதிகள்: 
05-07-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.
06-07-2025:  தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07-07-2025 முதல் 09-07-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
05-07-2025: தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06-07-2025: தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07-07-2025: ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
08-07-2025: மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09-07-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
05-07-2025: மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன் – கோவா மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06-07-2025: மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று   மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன் – கோவா- கர்நாடகா  மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு  அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07-07-2025 முதல் 09-07-2025 வரை: மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று   மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன் – கோவா- வடக்கு கர்நாடகா  மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு  அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்"
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Tags :
IMDRainrain alertRain UpdateTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article