Rain Alert | மக்களே உஷார்... மாலை 4 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, தெற்கு கொங்கன் – கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் (நாளை மாலை) வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரளா – தமிழ்நாடு பகுதிகளில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, வரும் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தேனி
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி
கோயம்புத்தூர்
திருப்பத்தூர்