Rain Alert | "மழை வர போகுதே"... 20 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
05:02 PM May 20, 2025 IST | Web Editor
Advertisement
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா-வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் 22ம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
இதையும் படியுங்கள் : சிவகங்கை | கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
வேலூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
சேலம்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
கடலூர்
திருவள்ளூர்
சென்னை
புதுச்சேரி
Advertisement
லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி
ஈரோடு
நாமக்கல்
திருச்சி
அரியலூர்
பெரம்பலூர்