Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Rain Alert | இரவு 7 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
05:04 PM Jun 21, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவ்வப்போது தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

Advertisement

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையை பொருத்தவரை இன்றும், நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
IMDRainrain alertRain UpdateTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article