For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரயில் பாதை பராமரிப்பு பணி -  ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!

09:28 PM Dec 30, 2023 IST | Web Editor
ரயில் பாதை பராமரிப்பு பணி    ஜன 1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து
Advertisement

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை
கோட்டம் அறிவித்துள்ளது. 

Advertisement

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன் காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  மகர விளக்கு பூஜை : சபரிமலை நடை திறப்பு!

மேலும் வாஞ்சி மணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய இரு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் மற்றும் சென்னை - திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஜன.1-ம் தேதி முதல் ஜன.5-ம் தேதி வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement