"ரூட்டு தல" மோதல் சம்பவங்கள் - 30 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கடிதம்.!
ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 30 மாநிலக் கல்லூரி மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 30 மாநிலக் கல்லூரி மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரயில் நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் சம்பவத்தில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக நடந்த மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மோதல் சம்பவங்கள் நடைபெற காரணமான மாநிலக் கல்லூரி மாணவர்கள் 30 பேரை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரயில்வே போலீசார் மாநிலக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
ரயில் நிலையங்களில் மாணவர்கள் மோதலை தடுக்க சென்னை ஆவடி தாம்பரம் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து மாணவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் போலீசாரும் பயணம் செய்து மாணவர்களை கண்காணிக்கவும் , ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.