For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழப்பு!

05:23 PM Nov 09, 2024 IST | Web Editor
பீகாரில் ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழப்பு
Advertisement

பீகாரில் இரு ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி, உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, எஞ்சினுடன் இணைக்கும் COUPLINGஐ பிரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் ஈடுபட்டுள்ளார். அப்போது இரண்டுக்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால், இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அலார ஒலி எழுந்தவுடன், ஓட்டுநர் ரயிலிலிருந்து இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். என்ஜினை மாற்றவோ அல்லது விபத்தைத் தடுக்கவோ அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement