Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

I.N.D.I.A. கூட்டணியிலிருந்து நிதீஷ்குமார் விலகிய நிலையில் பீகாருக்குள் நுழைந்த ராகுல்காந்தி நடைபயணம்!

12:52 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய நீதி நடைப்பயணம், பிகார் மாநிலத்தில் இன்று நுழைந்தது.

Advertisement

நாட்டில் கிழக்கில் இருந்து மேற்காக 6,713 கி.மீ. தொலைவுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது.

இதையும் படியுங்கள்; பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’  ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.  ஜனவரி 20 ஆம் தேதி ராகுல் காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்’ அருணாச்சல பிரதேசம் சென்றடைந்தது. தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து, இந்த நடைப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது. மேலும், 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்த மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி- 28) மீண்டும் ராகுல் காந்தி தொடங்கினார்.

சிலிகுரி அருகே நிறைவடைந்த அவரது பயணம், இன்று கிஷன்கஞ்ச் வழியாக பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தது.  அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதையடுத்து, 31-ஆம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.  பீகார் மாநிலத்தில் நேற்று மிகப் பெரிய அரசியல் பரபரப்பு நிகழ்ந்த நிலையில்,  ராகுல் காந்தியின் நடைப்பயணம் அந்த மாநிலத்துக்குள் நுழைந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags :
BharatNyayYatraBiharCongressManipurToMumbaiNews7Tamilnews7TamilUpdatesRahulGandhi
Advertisement
Next Article