For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Sambhal | உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்த நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி!

11:12 AM Dec 04, 2024 IST | Web Editor
 sambhal   உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்த நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி
Advertisement

வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்தை பார்வையிட திட்டமிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் கிபி 1526முதல் ஷாஹி ஜமா பள்ளிவாசல் அமைந்துள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல், இந்து கோயிலை இடித்து கட்டியிருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிவாசலை ஆய்வு செய்யக் குழு அமைத்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆய்வுகுழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் கடந்த நவ.24ம் தேதி காலை பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்தனர். அப்போது அங்கு கூடிய ஏராளமானோர் ஆய்வுக்குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்ட போதும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசியதாக சொல்லப்படுகிறது. காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் நயீம், பிலால், நௌமன், முகமது கைஃப் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் பிஆர்ஓ ஒருவர் காலில் படுகாயமடைந்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் நகருக்கு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (டிச.4) பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவர் வன்முறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவும் இருந்தார். வன்முறை நடைபெற்ற சம்பல் மாவட்டத்திற்குள் வெளிநபர்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியுடன், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் என 6 எம்.பி-க்கள் சம்பல் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்ற காரை உத்தரப் பிரதேச எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Advertisement