Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" - இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
01:24 PM Sep 18, 2025 IST | Web Editor
எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று இந்திய தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், "எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது. 2023 ஆம் ஆண்டில், ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில முயற்சிகள் நடந்துள்ளன.

Advertisement

ஆனால் அவை தோல்வியடைந்துள்ளது. மேலும் அந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணைய புகாரின பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தரவுகள் பதிவுகளின்படி, ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2018ல் பா.ஜ.க வேட்பாளர் சுபாத் குட்டேதாரும், 2023 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர்.பாட்டீலும் வெற்றி பெற்றனர்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
allegationsCongressElection commissionexplainsIndiaRahul gandhi
Advertisement
Next Article