Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை…!

12:52 PM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.  இதற்காக மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தாளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிறங்குகினார்.

இந்நிலையில் நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை செய்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சோதனை நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு சென்றார் ராகுல் காந்தி.  இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர் சந்தித்தார்.  பின்னர் வயநாடு புறப்பட்டு செல்லும் அவர் சுல்தான் பத்தேரி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Tags :
#BJP BJP ManifestoElection2024IndiaLok sabha Election 2024ndaNilagiriRahul gandhi
Advertisement
Next Article