ஜம்மு&காஷ்மீர் செல்லும் கார்கே, ராகுல் காந்தி! ஏன் தெரியுமா?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இரண்டு நாள் பயணமாக ஜம்மு&காஷ்மீர் செல்கின்றனர்.
ஜம்மு & காஷ்மீரில் வரும் செப்டம்பர் முதல் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக, கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆக.21, 22 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஜம்மு&காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சட்டபேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.