Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட இடங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு!

06:20 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி கேரளாவில் கனமழை பெய்தது.

இதனைத்தொடர்ந்து பெய்த கனமழையால் வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மாலாவில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. தற்போது வரை கிட்டதட்ட 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் முதல் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : லட்சக்கணக்கில் எகிறிய ராகுல் காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு | கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என கூறும் தொழிலாளி!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார். நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கூட்டத்தையும் நேற்று நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து, நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார். அங்கு நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.மேலும்,நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருவரும் மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கும் ராகுல் காந்தி சென்றார். அங்கு நிலச்சரிவில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Tags :
#PrayForWayanadaffected areasHeavyRainfallKeralaKeralaLandslidelandslideNaturalDisasterpriyanka gandhiRahul gandhiWayanadWayanadLandslides
Advertisement
Next Article