ரே பரேலியில் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல் காந்தி!
ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தி பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தை விட ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலா தேசிய கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி 2.62 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். கேரளா வயநாடு, உத்தரப் பிரதேசம் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தி பெற்ற வாக்குகளை விட ராகுல் காந்தி அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
ரே பரேலி தொகுதியில் சோனியா 2004ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை அவர் மக்களவைக்குப் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ரே பரேலியில் போட்டியிட்டார்.