இப்படி வேறுநாட்டில் பேசியிருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார் - RSS தலைவருக்கு ராகுல் காந்தி பதிலடி!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட நாளில்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி பதில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று(ஜன.15) நடைபெற்ற ‘இந்திரா பவன்’ திறப்பு விழாவில் பங்கேற்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அதில் , “சுதந்திர இயக்கம் மற்றும் அரசியலமைப்பு பற்றி மோகன் பகவத் நினைப்பதை 2,3 நாட்களுக்கு ஒருமுறை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பேசி வருகிறார். அவர் கூறியிருப்பது தேச துரோகமாகும். அரசிலயமைப்பு சட்டம் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் செல்லாது என துணிச்சலாக அவர் பேசியுள்ளார், இதுபோல் வேறு எந்த நாட்டில் பேசினாலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பார்.
1947 இல் இந்தியா உண்மையான சுதந்திரம் பெறவில்லை என மோகன் பகவத் கூறியிருப்பது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களையும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் அவமதிப்பதும், நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் போன்றது” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.