விக்னேஷ் புத்தூருக்கு பதிலாக ரகு சர்மா: மும்பை அணியில் மாற்றம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
01:42 PM May 01, 2025 IST
|
Web Editor
Advertisement
மும்பை அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் சென்னை அணிக்கு எதிராக அறிமுகமாகி சிறப்பாக பந்து வீசினார். கடைசி சில போட்டிகளில் சுமாராக பந்துவீசினாலும் இந்திய ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது, விக்னேஷ் புத்தூருக்குப் பதிலாக 31 வயது ரகு சர்மா அணியில் இணைந்துள்ளார்.
வலது கை சுழற் பந்துவீச்சாளரான ரகு சர்மா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப், புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார். 11 முதல்தர போட்டிகளில் 57 விக்கெட்டுகளும், 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
Next Article