For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹாலிவுட் பட வசனத்தை பேசிய ராதிகா மெர்ச்சன்ட் | கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

11:19 AM Mar 09, 2024 IST | Web Editor
ஹாலிவுட் பட வசனத்தை பேசிய ராதிகா மெர்ச்சன்ட்   கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
Advertisement

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ராதிகா மெர்ச்சன்ட் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

விழாவில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரியானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி உள்ளிட்ட ஏராளமான உலக பிரபலங்கள் பங்கேற்றனர்.  அதே போல், இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், எம்.எஸ். தோனி, சானியா நேவால், அட்லீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில்,  ராதிகா மெர்ச்சன்ட் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் ராதிகா ஆனந்துடன் மேடையில் பேசுகிறார். இந்த பேச்சு அசல் இல்லை, ஹாலிவுட்  திரைபடம் ஒன்றில் வரும் வசனம் என்பதை இணைய மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.  இதையடுத்து ராதிகா நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

வீடியோவில்,  ஆனந்த்  அம்பானி மீதான காதலை வெளிப்படுத்த மேடையில் இருந்து ராதிகா சொன்ன விஷயங்கள் “ஷால் வீ டான்ஸ்” என்ற ஹாலிவுட் படத்தின் வசனங்கள். இதில் சூசன் சரண்டனின் கேரக்டர் ரிச்சர்ட் ஜென்கின்ஸ் உடன் பேசும் “விட்னஸ் டு யுவர் லைஃப்” என்ற வசனத்தையே ராதிகா மேடையில் பேசியது.  இந்த உரையாடலின் வரும் அதே டயலாக்கை ராதிகா தனது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திலும் பதிவு செய்தார்.

ஆனால் இணையவாசிகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள்.  அதனால் தான் ராதிகாவின் இந்த பேச்சின் பின்புலம் சிக்கியது.  இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ராதிகா ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாகவும் சிலர் உள்ளனர்.

உரையாடலின் முழுமையான காட்சியை இங்கே பார்க்கலாம். ...

'ஷால் வி டான்ஸ்' ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படம்,.  இது 2004 இல் வெளியானது. இது 1996 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான ஜப்பானிய திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த ஹாலிவுட் ரீமேக்கில் Richard Gere, Jennifer Lopez, Susan Sarandon, Stanley Tucci மற்றும் Richard Jenkins போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

Advertisement