For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் டிச.9 -ஆம் தேதி ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார்பந்தய போட்டி! முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

05:21 PM Nov 24, 2023 IST | Web Editor
சென்னையில் டிச 9  ஆம் தேதி ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார்பந்தய போட்டி   முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement

சென்னையில் ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார்பந்தய போட்டி, டிசம்பர் 9 தேதி
தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

சென்னையில் 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரவு நேரத்தில் ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார்பந்தய போட்டி நடக்கவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போன்று கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண 7 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை முதல் (25.11.2023) டிக்கெட் விற்பனை  தொடங்கப்படவுள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து, ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார்பந்தயம் போட்டியை நடத்துகின்றன.

அதன்படி சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4
கார்பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை தீவுத்திடல்
மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில், டிசம்பர் 9, 10 ஆகிய
தேதிகளில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று வரும் இந்த பணிகளை இளைஞர் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை
அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு,
மேயர் பிரியா ராஜன்,துணை மேயர் மகேஷ் குமார் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறியதாவது:

ஏற்கனவே அறிவித்தபடி சென்னையில் வருகின்ற டிச. 9 மற்றும் 10 தேதிகளில் இரவு
நேர ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தையம் நடைபெற உள்ளது. அதற்கான
ஆயத்த பணிகளில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்தோம். இன்று மாலை தலைமை செயலகத்தில் பார்முலா ரேசிங் போட்டியின் பணிகள் குறித்தான
கூட்டம் நடைப்பெற உள்ளது. திட்டமிட்டபடி இப்போட்டிகான பணிகள் 10 நாட்களில் நிறைவடையும். இப்போட்டிக்கான வழிப்பாதைகள் ஒப்பந்த அடிப்படையிலானவை. 3 வருடம் இப்போட்டியை நடத்துவதற்கு கையெழுத்திட்டுள்ளோம்.

அடுத்த 2 வருடமும் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சென்னையில் தீவுத்திடலில் இப்போட்டியை நடத்துகிறோம் இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Tags :
Advertisement