Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரச்சின் ரவீந்திராவிற்கு திருஷ்டி கழித்த பாட்டி - வீடியோ இணையதளத்தில் வைரல்!

10:06 PM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவிற்கு அவரது பாட்டி திருஷ்டி கழிக்கும் விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர். இவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் பலரின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளார் ரச்சின்.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ரச்சின், 565 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 25 வயதுக்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார்.

மேலும் ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிரடியாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா, தனது அறிமுக தொடரிலேயே 3 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை உடனான போட்டிக்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தனது தாத்தா- பாட்டி வீட்டுக்கு ரச்சின் சென்றுள்ளார். அங்கு அவரின் பாட்டி ரச்சினுக்கு திருஷ்டி கழிக்கும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
#ViralVideoBangaloreCricketgrandmotherIndianewzealandRachinRavindra
Advertisement
Next Article