ஆர்.என். ரவி டெல்லி பயணம்: ஜக்தீப் தன்கரை சந்தித்தது ஏன்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதற்கு, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் ஆகியுள்ளது.
அரசமைப்பின் 145வது பிரிவை விளக்குவதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. அரசமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரை சந்தித்துள்ளார். அமித்ஷாவை சந்திக்க ஆளுநர் டெல்லி சென்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஜகதீப் தன்கரை சந்தித்துள்ளார் .