ஓய்வு முடிவை திரும்ப பெற்று அணிக்கு திரும்பிய குவிண்டன் டிகாக்.!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயனத்தில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போடிகள் என மூன்று வடிவிலான போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக மார்க்ரம் , டி20 அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தென்னாப்பிரிகாவின் நட்சத்திர வீரர் குவிண்டன் டிகாக் அணிக்கு திரும்பியுள்ளார். 2023ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்குப்பின் டி காக் தனது ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார்.
குவிண்டன் டிகாக் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு ஊக்கமளிக்கும் என்று தென்னாப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார்.