For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் 'Queen of Tears' - நெட்ஃபிளிக்ஸ் Top 10 பட்டியலில் முதலிடம்!

08:59 AM Apr 04, 2024 IST | Jeni
ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும்  queen of tears    நெட்ஃபிளிக்ஸ் top 10 பட்டியலில் முதலிடம்
Advertisement

தென் கொரிய தொடரான ‘Queen of Tears’, ரசிகர்களை குவித்து வரும் நிலையில், நெட்ஃபிளிக்ஸ் குளோபல் டாப் 10 தொடர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Advertisement

கிம் சூ ஹியுன், கிம் ஜி வோன், பார்க் சங் ஹூன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தென்கொரிய தொடர், ‘Queen of Tears’. ஜங் யங் வூ, கிம் ஹீ வோன் ஆகியோர இயக்கியுள்ள இந்த தொடரை ஸ்டுடியோ ட்ராகன் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘Queen of Tears’ தொடரின் முதல் எபிசோட் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 9-ம் தேதி வெளியானது. வார இறுதி நாட்களில் 2 எபிசோட்களாக வெளியாகி வரும் இந்த தொடருக்கு உலகளவில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 08 எபிசோட்கள் வெளியாகியுள்ளன. தென்கொரிய திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கிம் சூ ஹியுன், கிம் ஜி வோன் நடித்துள்ளதால், தொடரின் மீது தொடக்கம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இதையும் படியுங்கள் : “யார் பிரச்சாரம் செய்தாலும், பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது” - ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம்

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளவில் பார்வையாளர்களை வாரம் வாரம் குவித்து வந்த ‘Queen of Tears’ தொடர், நேற்று உச்சம் தொட்டுள்ளது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் குளோபல் டாப் 10 தொடர்களின் (Non-English) பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. FlixPatrol-ன் படி, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, கிரீஸ், துருக்கி, சவுதி அரேபியா, பிரேசில், மெக்சிகோ உட்பட உலகளவில் மொத்தம் 68 நாடுகளில் TOP 10 பட்டியலில் ‘Queen of Tears’ தொடர் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து இத்தொடருக்கு ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags :
Advertisement