For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை #F4 கார் பந்தயத்தின் 2வது நாள் தகுதிச்சுற்று - இந்தியாவின் மெக்பெர்சன் முதலிடம்!

04:00 PM Sep 01, 2024 IST | Web Editor
சென்னை  f4 கார் பந்தயத்தின் 2வது நாள் தகுதிச்சுற்று   இந்தியாவின் மெக்பெர்சன் முதலிடம்
Advertisement

சென்னையில் நைட் ஸ்ட்ரீட் கார் பந்தய இரண்டாவது நாள் போட்டியின் தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் இந்தியாவின் மெக்பெர்சன் முதலிடத்தை பிடித்தார்.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 31) துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10:45 மணி வரை, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. சோதனை ஓட்டம், தகுதிச் சுற்றுப் போட்டிகள் என பல்வேறு நிலைகளில் இன்றைய போட்டிகள் நடைபெற்றது.காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.

தகுதிச்சுற்று முதல் போட்டியின் ரவுண்டு 2, FLGP 4 கார் பந்தய போட்டியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் மின்னல் வேகத்தில் பந்தய கார்களை இயக்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இந்தியாவின் மெக்பெர்சன் 2 நிமிடம் மூன்று வினாடிகளில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். இரண்டாவது இடத்தை தில்ஜித் மற்றும் மூன்றாவது இடத்தை டத்தா பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஐ ஆர் எல், ஃபார்முலா 4யின் தகுதி சுற்று போட்டிகளும் சுற்று மற்றும் பிரதான சுற்று போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் :விடுமுறை தினத்தையொட்டி #Tiruvannamalai அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஐஆர்எல் -டிரைவர் ஏ பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளும், மாலை 3:55 மணி முதல் மாலை 4:35 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு பந்தயங்களும் நடைபெறுகின்றன.மாலை 4:50 மணி முதல் 5:35 மணி வரை, பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களும், 5:50 மணி முதல் 6:35 மணி வரை ஐஆர்எல் – டிரைவர் ஏ பிரிவு போட்டிகளும் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து மாலை 6:45 மணி முதல் 7:45 வரை, ஒரு மணி நேரம் கார் பந்தய வீரர்களின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 7:55 மணி முதல் 8:40 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு போட்டிகளும், 8:50 மணி முதல் 9:35 வரை பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இறுதியாக 9:50 மணி முதல் 10:35 மணி வரை ஐஆர்எல் -டிரைவர் பி பிரிவு பந்தயங்கள் நடைபெறுகின்றன. இரவு 10:45 பந்தய சாலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement